சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் லாக்டவுன் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மேலும் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 9,11,110 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,824 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,70,546 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 17 பேர் உயிரிழக்க ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 12,804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் லாக்டவுன் எந்நேரமும் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது.

இந் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் லாக்டவுன் இதுவரை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: கொரோனா நிலைமை தமிழகத்தில் மிகவும் தீவிரமாக இருப்பதாகவே தோன்றுகிறது, ஆனால் இதுவரை லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை. மக்கள் மாஸ்க் அணியாமல் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.