டெல்லி: கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை – கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

சீனாவைத் தொடர்ந்து, ஜப்பான், அமெரிக்கா, கொரியா குடியரசு, பிரேசில் மற்றும் சீனாவில் வழக்குகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் மாறுபாடுகளைக் கண்காணிக்க கோவிட் நேர்மறை மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறையையும் அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது. அதில்,   கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று  வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் மாண்டவியா  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், மாஸ்க் அணிந்தே கலந்துகொண்டனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா,

கொரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதேநேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் பிறப்பித்துள்ளேன்  எத்தகைய ஒரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் இன்றைய ஆலோசனை கூட்டடத்தில், இந்தியாவில், தற்போது கோவிட்-19 இன் 10 வெவ்வேறு வகைகள் உள்ளன, மேலும் சமீபத்திய மாறுபாடு BF 7  என்பது குறித்தும், ஓமிக்ரான் மாறுபாடு இன்னும் இந்தியாவில் உள்ளது மற்றும் டெல்டா வழக்குகள் குறித்து விவாரிதக்கப்பட்துடன்,   “நிலைமை கட்டுக்குள் உள்ளது. மேலும்,  முறையான நெறிமுறைகளைப் பின்பற்றினால், இனி வரும் காலங்களில் தொற்று பரவல்  கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும்  கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பயணிகள் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதால் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வகுத்தல், கொரோனாவின் புதிய மாறுபாடு குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்ற பலருக்கு கோவிட் பாசிட்டிவ்  உள்ளது. (சமீபத்தில் பாதயாத்திரையில் கலந்துகொண்ட இமாச்சல் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்) அவர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,  இரவு தங்குமிடங்களில் கோவிட் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை  மாநில அரசுகள் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு வழிகாட்டுகிறது

தொற்று பரவல் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய இன்டர்னல் மெடிசின் & ரெஸ்பிரேட்டரி & ஸ்லீப் மெடிசின் & இயக்குனர் டாக்டர் ஆர் குலேரியா, குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கும். சிறந்த கவனிப்பு தேவை. மக்கள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள குழுக்கள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வதற்கும், பூஸ்டர் டோஸ் எடுப்பதற்கும் முக்கியமானது என்று தெரிவித்து உள்ளார்.