பனாஜி: கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக கோவாவில் ஜனவரி 26ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், பிறழ்வு வைரசான ஒமிக்ரான தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதனால், மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கோவா கடற்கரையில் மக்கள் கூடி குதூகலிக்க மாநில அரசு அனுமதி வழங்கியது. கோவிட் எழுச்சிக்கு மத்தியில் நிரம்பிய கோவா கடற்கரையில் மக்கள் அலைமோதிய நிலை யில், தற்போது அங்கு கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மருத்துவு நிபுணர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது கோவாவில் பள்ளிகளை திறக்க 15 நாட்கள் தடை விதிக்க மருத்துவ வல்லுநர்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுதது, கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி வரை கோவாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூடவும் உத்தர விடப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள், திரையரங்குகள், அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவிகித எண்ணிக்கை அளவில் மட்டுமே மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது..