சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 63 பேருக்கு  JN.1 Variant கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் 4 பேருக்கு இந்த  புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என  மத்திய சுகாதர துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த புதிய வகை கொரோனாவான JN.1 வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 63 பேருக்கு கொரோனாவின் திரிபு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த 34 பேர், மகாராஷ்டிராவில் இருந்து 9 பேர், கர்நாடகாவில் இருந்து 8 பேர், கேரளாவைச் சேர்ந்த 6 பேர், தமிழ்நாட்டில் 4 பேர், தெலங்கானாவை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ந்தியாவில், கடந்த  இரு மாதங்களில் புதிய வகையா கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4,054 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 3128 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிக்ச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கர்நாடகாவில் 344 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில்   28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு  மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 29 போருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 20 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 132 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் 66 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் சென்னையில் மட்டும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில்  ஜேஎன்1 வகை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவாவில் 34 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கர்நாடகாவில் 8 பேரும், கேரளாவில் 6 பேரும், தெலங்கானாவில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் 63 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதர துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,054 ஆக உயர்ந்துள்ளது.

இதைடுத்து  மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் மிகுந்த பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், மாஸ்க் அணிந்து பொது இடங்களுக்கு செல்வதன் மூலம் தொற்று பாதிப்பை பொதுமக்கள் தவிர்க்கலாம். முன்னதாக, கொரோனா தொற்றின் புதிய வேரியண்ட்டான ஜேஎன்.1 கவனிக்கப்பட வேண்டியது எனவும், அதேநேரம் இதனால் ஏற்படும் ஆபத்து என்பது குறைவானது எனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.