ஜெனிவா: 
கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது, உலகம் இன்னும் கொரோனாதொற்றுநோயின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இன்னும் அதிகளவிலான மாறுபட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸுடன் தடுப்பூசி உற்பத்தி நிலையங்களுக்குச் சென்ற  அவர்,  செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தொற்றுநோய் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியாது.   இப்போது சிலர் செய்வது போல் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவிக்க வேண்டாம். இவ்வளவு காலமாக நாம் எடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கைவிடுவது முட்டாள்தனமானது. நாம் அதைத் தொடர வேண்டும்.  நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.