டெல்லி: நாடு முழுவதும உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேர்த்து, தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மத்தியஅரசிடம் இருந்து இதுவரை  21கோடியே 33லட்சத்து 74ஆயிரத்து 720 டோஸ்கள் கொரோனா   தடுப்பூசி , மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்,  இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒருசில நாட்களில் மெலும்,  2,67,110 டோஸ்கள் தடுப்பூசிகளை வழங்க மத்தியஅரசு தயாராகி வருகிறது.

இன்று (22/05/2021) காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, இதுவரை  19,73,61,311 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில்,  சுமார் 1.60 கோடிக்கும் அதிகமான (1,60,13,409) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.