சென்னை: தமிழகத்தில் வரும் 24ந்தேதி முதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த, தளர்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 24ந்தேதி திங்கள் முதல் பொதுமுடக்கம் அமலாக்கப்படுகிறது. தமிழகத்தில் மே 10 முதல் சிறு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பொதுமுடக்க்த்தை மிகவும் கடுமையாக அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
இதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில், முழு பொதுமுடக்கத்தை தீவிசரமாக அமல்படுத்துவது, காய்கறி, பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் போன்றவவை ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.