வாஷிங்டன்:
மெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர் ஜனாதிபதி ஜோ பைடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஹாரிஸ் தற்போது நலமுடன் உள்ளார் என்றும், கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றும் அவர், உறுதியான பரிசோதனைக்கு பின்னர் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.