அபுதாபி:
புதாபி, பசுமை நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா மற்றும் பிரிட்டனை நீக்கியுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா,சீனா,ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. பச்சை நிற பட்டியலில் இருக்கும் நாடுகளிருந்து வரும் பயணிகள் அபுதாபிக்கு வந்ததும் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனையின் முடிவு வரும் வரை சுய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும், கொரோனா பரிசோதனையின் முடிவு நெகடிவ் என வந்த பின் தனிமைபடுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மற்ற நாடுகளிலிருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள் 10நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், அத்துடன் கொரோனா நெகடிவ் சான்றிதழையும் வைத்திருக்கவேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜூன் 15 ஆம் தேதி முதல் அபுதாபியில் ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.