ஐதராபாத்: வருடத்திற்கு 100 கோடி டோஸ்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக, இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத் தயாரிப்பான கோவிஷீல்டு, ஐதபாராத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த கோவாக்சின் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை  19கோடியே 18லட்சத்து 79ஆயிரத்து 503 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் இந்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா , கூடுதல் மேலாண்மை இயக்குநர் சுசித்திரா எல்லா, ஒரு வருடத்திற்குள் 90 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், கடந்த  ஏப்ரல் மாதத்தில் 20 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதாகவும், இந்த மாதம் (மே) முதல்   30 முதல் 35 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் பாரத்பயோடெக் நிறுவனம்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் கூட்டாக இணைந்து கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எம்.பி. வசதியுடன் ஆண்டுக்கு 200 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தரப்பபில், ஆண்டுக்கு 700 மில்லியன் டோஸ்களை உருவாக்க ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன்படி மாதத்திற்கு 58 மில்லியன் தடுப்பூசிகள் உருவாக்கப்படும். ஆனாலும் இன்னும் பயோடெக் நிறுவனம் தங்களின் உச்ச அளவை எட்டவில்லை. ஏப்ரல் மாதத்தில் 20 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கியது. மே மாதம் 30 முதல் 35 மில்லியன் தடுப்பூசிகளை உருவாக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறினார்.

கோவாக்ஸின் உற்பத்தியை அதிகரிக்க  நான்கு உற்பத்தியாளர்கள் முன்வந்துள்ளனர். மகாராஷ்டிராவின் ஹாஃப்கைன் பயோஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன், மையத்தின் பாரத் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கழகம், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் ஆம்னிபிஆர்எக்ஸ் பயோடெக்னாலஜிஸ், ஹெஸ்டர் பயோ சயின்சஸ் மற்றும் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் கூட்டமைப்பாகும். முதல் மூன்று நிறுவனங்களின் ஒத்துழைப்புகளின் விளைவாக, மே மாதத்தில் 30 மில்லியன் டோஸிலிருந்து நவம்பர் மாதத்திற்குள் கோவாக்சின் உற்பத்தி 135 மில்லியன் டோஸாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆண்டுக்கு ஒரு பில்லியன் (100 கோடி) டோஸ் தயாரிக்க பாரத் பயோடெக் இலக்கு நிர்ணியித்து உள்ளது.