டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜூன் 3ந்தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன. சீனர்களுக்கு சட்டவிரோதமாக ரூ.50லட்சம் பெற்றுக்கொண்டு ‘விசா’ வாங்கித் தந்ததாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக, அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதுடன், அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை யும் கைது செய்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுது. அதன்படி, 3 நாள் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

முன்னதாக அவர்  தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த டெல்லி ரோஸ்மேரி நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறையும், அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்க கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் முன்ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது.  ED க்காக வழக்கை வாதிட்ட அரசு வழக்கறிஞர், கார்த்தி கைது செய்யப்படலாம் என்ற அச்சம் என்று நீதிபதி நாக்பால் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, “நாங்கள் விசாரணையை மட்டுமே தொடங்கினோம்” என்று கூறினார். மேலும்,  “பிரிவு 19ன் கீழ், கைது செய்யப்படுவதற்கு முன் ஒரு கண்டுபிடிப்பு இருக்க வேண்டும். கண்டுபிடிக்கும் வரை கைது செய்ய மாட்டோம் என அறிக்கை விடுகிறேன். IO விடம் இருந்து எங்களுக்கு எந்த ஆவணமும் வரவில்லை. விசாரிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி எங்களுக்கு முன் எந்த பொருளும் இல்லை என்றார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட உடனேயே, பணமோசடி நடந்ததா என விசாரிக்காமல் ஈ.சி.ஐ.ஆர். பதிவு செய்கின்றனர். இ.சி.ஐ.ஆர். (அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கை) எப்படிப் பதிவு செய்யப்பட்டது? அவர்களிடம் ஏதாவது இருக்க வேண்டும். பணமோசடி நடந்ததற்கான ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி ஏதாவது கிடைத்ததா என்று கேள்வி எழுப்பியவ,  கார்த்தி சிதம்பரத்தை கைது ஜூன் 3ந்தேதி வரை செய்ய இடைக்கால தடை விதிப்பதாகவும், ஜுன் 3ந்தேதி உத்தவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.