சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து தமிழக அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரிக் கேள்வி எழுப்பி உள்ளார். நீதிமன்றம் ஒரு கட்சிக்கு அல்லது அரசுக்கோ உரித்தானது அல்ல என கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஏராளமான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. கடந்த காலங்களில், திமுக மற்றும் கூட்டணி கட்சியின்மீது பதியப்பட்ட, பொதுநல வழக்குகள், அவதூறு வழக்குகள் உள்பட பல வழக்குகள்,  பல வழக்குகள்  வாபஸ்பெறப்பட்டன. இதில் திமுகவினர் மீதான  பல ஊழல் வழக்குகள் நீர்த்துப்போக செய்யப்பட்டன. இதனால், பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களை கடுமையாக சாடியிருந்தது. மேலும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அந்த வழக்கின்மீது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

உண்மை நிலவரம் இப்படி இருக்க பல திமுக அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்தும், குற்றவாளிகளை விடுதலை செய்தும் வருகின்றன. இது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைத்தன்மையை பொய்த்துப்போக செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடி மீதான ரத்து செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாவே மீண்டும் விசாரணை செய்யப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான ரத்து செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கையும் மீண்டும் விசாரணை நடத்தப்போவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.78.40 லட்சம் சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும், ரூ.44.56 லட்சம் சேர்த்ததாக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,.அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீதான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை மற்றும் வழக்கை விசாரணை செய்த நீதிபதி மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் சய்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் இந்த வழக்குகள்  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர்கள்  விடுக்கப்பட்ட தீர்ப்பை படித்துவிட்டு 3 நாள்களாக தூங்கவில்லை என்று கூறியவர், அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளும் ஒரே மாதிரியானவையாக உள்ளன.  இந்த  இரு வழக்குகளிலும், சிறப்பு நீதிமன்ற விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் சரியானதாக இல்லை, தீர்ப்புகளுக்கு ஒரு ஃபார்மட்டை மட்டும் வைத்துக்கொண்டு, தேதிகளை மட்டும் மாற்றி, விடுதலை என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கில், வருமான வரித்துறையினர், 2021ஆம் ஆண்டுக்குப் பின் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது நன்கு தெரிகிறது, இதற்கு பிறகும் நான் கண்ணை மூடிக்கொண்டிருந்தால், கடமையை செய்யத் தவறியவனாகி விடுவேன் என்று கடுமையாக சாடினார். 

மேலும், மாநிலத்தில், யார் அதிகாரத்துக்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப்போகவே செய்கின்றனர் என்று திமுக அரசை சாடியதுடன்,  இந்த வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறை செப்டம்பர்  20க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,

நீதிமன்றம் ஒரு கட்சிக்கு அல்லது அரசுக்கோ உரித்தானது அல்ல. குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தான என  தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

நீதிபதியின் அதிரடி கருத்து திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளருது.