கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லையம்பதி புலிகள் சரணாலயத்தில் புலியை கண்ணெதிரில் பார்த்தும் பதட்டமில்லாமல் ஒரு ஜோடி வீடியோ எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆனைமலை முதல் பாலக்காட்டின் நெல்லையம்பதி வரை உள்ள புலிகள் சரணாலயத்தில் இயற்கையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கமான ஒன்று.

இதற்காக நெல்லையம்பதி உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளது.

இவ்வழியாக சுற்றுலா சென்ற தம்பதியர் சாலையில் தங்களுக்கு முன்னால் மிகப்பெரிய புலி ஒன்று இருப்பதைப் பார்த்து தங்கள் காரை நிறுத்தி விட்டு அதை படம் பிடிக்க துவங்கியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.