2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரவு 8.15 நிலவரப்படி, திமுக கூட்டணி மொத்தமாக 158 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
திமுக இத்தேர்தலில், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை, தனித்தே பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக அமர்வதும் உறுதியாகிவிட்டது.
பல தொகுதிகளில், வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவான அளவிலேயே இருப்பதால், முன்னணி நிலவரங்கள் தொடர்ந்து மாறலாம் என்று நம்பப்படுகிறது. அதேசமயம், இத்தேர்தலில், வாக்குகள் எண்ணும் பணி மிகவும் மெதுவாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
திமுக & அதிமுக கூட்டணிகள் தவிர, வேறு கூட்டணிகளுக்கு 1 இடம்கூட கிடைக்கவில்லை. இத்தேர்தலின் இறுதியான முடிவுகள் தெரிய, இன்று நள்ளிரவு வரை ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது.