டெல்லி: குஜராத், இமாலச்சல் தவிர,  5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மைன்புரி மக்களவைத் தொகுதிக்கும், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு சட்டமன்ற தொகுதி மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 5 மாநிலங்களைச் சேர்ந்த,  6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சதார், கத்துவாலி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும்,இ  ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர், பிகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் இன்று காலை 8மணக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவை அடுத்து நடைபெற்ற மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவரது மருமகளும், உத்தரப்பிரதசே முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் பாஜக, ரகுராஜ் சிங் சாக்யா என்பவரை களமிறக்கியது.

மெயின்புரி தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டை என கருதப்படுவதால், இந்த தேர்தலில் டிம்பிள் யாதவின் வெற்றி அக்கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது