காந்திநகர்: குஜராத்தில் பாஜக 149 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காலை 10மணி நிலவரப்படி, அங்கு பாஜக 149 இடங்களிலம், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் ஆம்ஆத்மி 6 இடங்களிளும் சுயேச்சை 3 இடங்களிலும் சமாஜ்வாதி பார்ட்டி ஒரு இடங்களிலும் முன்னிலையில்உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல  182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.  முதல்கட்ட தேர்தலானது  89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

தேர்தல் முடிவுகளுக்கு https://results.eci.gov.in/ இணையதளத்தை பார்க்கலாம்.