** எடப்பாடி ஆட்சியில், அவர் உட்பட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது, நாள் தோறும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் புறப்பட்டு வருகின்றன!

அவற்றில், கோயம் பேடு-மதுரவாயல் சந்திப்பில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 10.5 ஏக்கர் அரசு நிலத்தை முன்னாள் துணை முதல்வர் ஓ. பி. எஸ் குடும்பத்தார் முறைகேடாக விற்பனை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

அதுவும், ஓ. பி. எஸ் சின் மூன்று மகன்கள் பங்குதாரர்களாக இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு மிகக் குறைந்த விலையில் அந்த அரசு நிலம் விற்கப்பட்டது!

அப்பகுதியில் சதுர அடி ரூ 25000 க்கு மார்க்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் சூழலில், அந்த இடம் ரூ12500 க்கு ஓ. பி. எஸ் குடும்பத்தாருக்கு முறைகேடாக விற்கப்பட்டுள்ளது!

இந்த நிலம் இப்படி விற்கப்படுவதற்கு அன்றைய துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் காரணமாக இருந்துள்ளார்!

இதன் மூலம், அரசுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு,ம ற்றும், ஓ. பி. எஸ் குடும்பம் ஊழல் ஆகியவை நடைபெற்று உள்ளதாக தி. மு. க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்!

அ. தி. மு. க. வினரின் அடுக்கடுக்கான ஊழல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

*** ஓவியர் இரா. பாரி.