சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு: புதியதாக 3,000 பேருக்கு பாதிப்பு

Must read

பெய்ஜிங்: சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டை மட்டுமல்ல… உலக நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது. பல நாடுகளில் சீனர்களுக்கும், சீன உணவு வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது சீனாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 908ஐ ஆக உயர்ந்திருக்கிறது. 31 மாகாணங்களில் இதுவரை 40,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டுமே 97 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 3062 பேருக்கு நோய் தாக்கி இருக்கிறது. 91 இறப்புகள் ஹூபே மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள.  அன்ஹுயியில் 2 இறப்புகளும், ஹிலோங்ஜியாங், ஜியாங்சி, ஹைனான் மற்றும் கன்சு ஆகிய இடங்களில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன.

ஒரு பக்கம் பலி எண்ணிக்கை இருந்தாலும், நேற்று மட்டும் 3,281 நோயாளிகள் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 1,8 லட்சம் பேர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

 

 

 

More articles

Latest article