இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5லட்சத்தை தாண்டியது..

Must read

டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.   நாடு முழுவதும் கொரோனா தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் பெளியிட்டுள்ளது.

அதன்படி,  இந்தியாவில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 15,685ஆக  உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில்  384 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 15,685 ஆக    உயர்வடைந்து உள்ளது.

இதுவரை நோய்த் தொற்றில் இரந்து 2 லட்சத்து 95 ஆயிரத்து 881 பேர்  குணமடைந்து உள்ளனர்.

தற்போதைய நிலையில், 1 லட்சத்து 97 ஆயிரத்து 387 பேர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  508,953 ஆக உயர்வடைந்து உள்ளது.

More articles

Latest article