ராஜஸ்தான்:
ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில்  மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் குரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை வெளியிட்டார் இந்த மருந்தை ஆயுஷ் ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று ராஜஸ்தான் அரசு ஏற்கனவே தடை செய்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவும் இந்த ஆயுர்வேத மருந்தை தடை செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது டுவிட்டர் பக்கத்தில்: பதஞ்சலியின் ‘போலியான மருந்து’ கொரொனிலை மக்களிடம் பதஞ்சலி வினியோகம் செய்ய முயல்வதை நாங்கள் எச்சரிக்கின்றோம். மேலும் ஜெய்ப்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இந்த மருந்தை பரிசோதித்து, பயன்படுத்தலாம் என்று உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் இதை ஏற்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் உத்தரகண்ட் மாநிலம் பதஞ்சலியின் இந்த கொரொனில் என்ற மருந்து இருமல், ஜலதோஷம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளது ஆகையால் இதை கொரோனாவிற்கான மருந்தாக அங்கீகரிக்க முடியாது என்று கூறியுள்ளது.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சரின் பதிவை எதிர்த்து பி.ஜே.பி அமைச்சர் ராம் கடாம், பதஞ்சலியின் கொரொனிலுக்கு முன்னதாகவே ஜெய்ப்பூர் அங்கீகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்,  அதற்கு மீண்டும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்-  நாங்கள் மீண்டும் அதை முழுமையாக பரிசோதித்து பார்த்துக்கொள்கிறோம் மீண்டும் பாபா ராம்தேவ்ர்க்கு மகாராஷ்டிர மாநிலம் கடுமையான எச்சரிக்கின்றது, போலியான மருந்தை மக்களிடையே பெருக்கவும் மக்கள் வாழ்வுடன் விளையாடவும் மகாராஷ்டிர அரசு கண்டிப்பாக அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.