தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஒரு பெண்ணின் உடலில் கடந்த ஏழு மாதத்தில் 32 முறை கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி மட்டுப்பட்டிரு்கும் அதனால் அவர்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் உருமாறிய கொரோனா மேலும் எத்தனை பேருக்கு பரவியது என்பதோ, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோல் வேறு ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்பது குறித்தும் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து மேலும் ஆய்வு நடத்தப்படுவதாக மெட்ரிவிக்ஸ் என்ற மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

216 நாட்களாக ஒரு பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று தங்கியிருந்தது வியப்பை ஏற்படுத்தியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எய்ட்ஸ் பாதித்தவர்கள் சிலரை ஆய்வு செய்து வருவதாகவும் அப்படி அவர்களிடமும் இதுபோன்ற இருக்குமானால் கொரோனா வைரஸ் பரவலில் எய்ட்ஸ் நோயாளிகளின் பங்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.