டெல்லி:

ந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், மென்பொருள் நிறுவனங்கள் மீண்டெழ குறைந்தது 6 மாதம் காலம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு காரணமாக அனைத்துவித தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முடக்கம் சரியாக மேலும் 6 மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போதுதான் பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் 15 நாட்கள் பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவை பொருத்தவரை, லட்சக்கணக்கான பொறியாளர்களுக்கு வாழ்வளித்து வருவது மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப துறைகளும்தான்.  ஐடி துறையில், சுமார் 50 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், உலக நாடுகளில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமானோரை வீட்டுக்கு அனுப்பிவிட்ட நிலையில், வெகுசிலரை மட்டுமே வீடுகளில் அமர்ந்து பணியாற்ற அனுமதித்துள்ளது.

ஆனால்,work at home சலுகையால் குறித்த நேரத்தில் திட்டங்களை முடிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், மென்பொருள் நிறுவனங்களுக்கு தேவையான பணிகள் முடங்கியுள்ள நிலையில், அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் , சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகில் 55% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்கா வின் அனைத்து மாகாணங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்திய மென்பொருள் நிறுவனங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முடக்கம் சரியாக  மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.