பிரசவ கால விடுப்பை ரத்து செய்து கைக்குழந்தையோடு பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

Must read

விசாகப்பட்டினம்: கொரோனா காலம் என்பதால், பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி.

அவரது பெயர் ஜி. சிரிஜனா. பிறந்து வெறும் 22 நாட்களே ஆன தமது குழந்தையோடு, விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் இருக்கையில் அமர்ந்து தனது அன்றாடப் பணிகளை மிக உத்வேகத்துடன் செய்து வருகிறார்.

அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. இந்த தருணத்தில் தான் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியது. நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி ஆணையரான அவர் தமது பொறுப்பினை உணர்ந்த சிரிஜனா யாருமே எடுக்காத ஒரு முடிவை எடுத்தார்.

கைக் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி பணியாற்ற முடியும் என்பதற்கு அவர் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நாடு சவாலான சமயத்தில் இருக்கிறது. இப்போது, எனது பணி முக்கியம் என்பதை நான் உணர்ந்துள்ளேன். குழந்தையை பார்த்துக் கொண்டே பணியையும் நான் மேற்கொள்ள எனது கணவரும், தாயும் உதவி செய்கிறார்கள் என்கிறார்.

அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அதிகாரியைப் பாராட்டி உள்ளார். இது போன்றவர்களை கொண்டிருப்பது நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மனமார்ந்த நன்றி என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது 1 மாத குழந்தையுடன் கடமையாற்ற திரும்பினார். நெருக்கடி காலம் அவரை கடமையாற்ற அழைத்துள்ளது. இது போன்ற கடமை மிக்கவர்களை நாடு கொண்டிருப்பது தேசத்தின் அதிர்ஷ்டம் என்று பாஜக தலைவர் பி.எல்.சந்தோஷ் ட்வீட் செய்துள்ளார்.

More articles

Latest article