Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும்! உலக சுகாதார நிறுவனம்

Sep 2, 2020

ஜெனிவா:  உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும்  நிலையில், இதற்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது,  பேரழிவுக்கு ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலக அளவில் பாதிப்பு  இரண்டரை கோடியை தாண்டி உள்ளது.

உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 54 சதவிகித பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,  உ.பி உள்பட 10 மாநிலங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இருந்தாலும், நாட்டில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதுடன், மாநில அரசுகளும் தொற்று பரவலை கண்டுகொள்ளாமல், தளர்வுகளை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

கொரோனாவை தடுக்க இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாட்டின் பொருளாதார சரிவை எண்ணி, கடந்த 5 மாதங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கை இந்திய அரசு நீக்கி உள்ளது. மேலும் பல நாடுகளும் ஊரடங்கை தளர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இப்படி ஊரடங்கை தளர்த்தும் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்த, உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ்,  கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அவசர அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்.  ஊரடங்கை தளர்த்துவதில் தீவிரம் காட்டும் நாடுகள் வைரஸ் பரவலை தடுப்பதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூகங்கள் மற்றும் தனிநபர்கள்  சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  வைரஸ் செழித்து வளர்கிறது; மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்,  தொற்றுக்குள்ளான வர்களை கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், பரிசோதித்தல் மற்றும் கவனித்தல், அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், நோய்த்தொற்று பவல் தடுப்பு நடவடிக்கை  போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், கொரோனா தொற்று நாடுகளின் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 105  நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில்  90 சதவீத நாடுகள் கொரோனா தொற்றால் தங்கள் சுகாதார அமைப்பு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து உள்ளன. 70 சதவீத நாடுகள் கொரோனாவால் நாட்டில் எழுந்துள்ள சிக்கல்கள்  இடையூறுகள் குறித்து தெரிவித்து உள்ளன.

அத்துடன் வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.

Post navigation

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு! மலேசியா
வீடுகளுக்கு இனி தகரம் அடிக்கமாட்டோம்! கார்ப்பரேசன் கமிஷனர் உறுதி…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer