சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலக அளவில் பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது.
உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 54 சதவிகித பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உ.பி உள்பட 10 மாநிலங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இருந்தாலும், நாட்டில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதுடன், மாநில அரசுகளும் தொற்று பரவலை கண்டுகொள்ளாமல், தளர்வுகளை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
ஆனால் கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இப்படி ஊரடங்கை தளர்த்தும் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வைரஸ் செழித்து வளர்கிறது; மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும், தொற்றுக்குள்ளான வர்களை கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், பரிசோதித்தல் மற்றும் கவனித்தல், அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், நோய்த்தொற்று பவல் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், கொரோனா தொற்று நாடுகளின் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 105 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதில் 90 சதவீத நாடுகள் கொரோனா தொற்றால் தங்கள் சுகாதார அமைப்பு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து உள்ளன. 70 சதவீத நாடுகள் கொரோனாவால் நாட்டில் எழுந்துள்ள சிக்கல்கள் இடையூறுகள் குறித்து தெரிவித்து உள்ளன.