அறுவை சிகிச்சையின் நடுவே வந்த கொரோனா ரிசல்ட்.. அதிர்ந்த டாக்டர்கள்..

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 46 வயது நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு முறையும் கொரோனா இல்லை என்றே முடிவு வந்துள்ளது.

எதற்கும் இருக்கட்டும் என மூன்றாவது முறையாகவும் அவருக்கு  ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதற்கு மறுநாள் அவரது உடல்நிலை மோசம் ஆனதால் உடனடியாக அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி ஆபரேஷனும் ஆரம்பமானது. பாதி ஆபரேஷன் நடக்கும் போது நோயாளிக்கு கொரோனா இருப்பதாக மூன்றாவது பரிசோதனை அறிக்கையின் ரிசல்ட், டாக்டர்களுக்கு வந்து சேர்ந்தது. திடுக்கிட்டுப் போனார்கள்.

அறுவை சிகிச்சையை நிறுத்துவதா? தொடர்வதா? என அவர்களுக்குக் குழப்பம்.

ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, அனைத்து முன்னேற்பாடுகளுடன் ஆபரேஷனை தொடர்ந்தனர்.

ஆபரேஷன் முடிந்த பின் இன்னொரு ரிசல்ட் வந்தது. ’’நோயாளிக்கு கொரோனா தொற்று இல்லை’’ என்றது அந்த ரிசல்ட்.

ஆண்டவன் புண்ணியத்தில் நோயாளியும் நலம். நோயாளிக்குச் சிறுநீரகம் கொடுத்த அவரது சகோதரியும் நலம்.

இருவரும் ’டிஸ்சார்ஜ் ‘ ஆகி வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

-பா.பாரதி.