இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர்; மொத்த கொரோனா பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு

Must read

டெல்லி:
ந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில்,  மொத்த கொரோனா பாதிப்பு 10,38,716 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்தது.
கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில்  671 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 26,273 -ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு,  3,58,692 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751  ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,92,589 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;  உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,452 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 1,60,907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,315 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 1,20,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,571 பேர் பலியாகியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 17- ஆம் தேதி வரை 1,34,33,742 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 3,61,024 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் 10 லட்சம் பேரில் 658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More articles

Latest article