ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 34.57லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது பரவி வரும் தொற்றின் 2வது அலை இந்தியா உள்பட பல நாடுகளில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும்,  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  16,64,58,272 ஆக உயர்;ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து  இதுவரை 14,72,59,395 பேர் குணமடைந்துள்ளனர்.   இதுவரை 34 லட்சத்து 57 ஆயிரத்து 105 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிக்கப்பட்டு தற்போதைய நிலையில்,  1,57,41,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,226 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,38,62,398 ஆகவும், இதுவரை  6,03,408 உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை   2,73,99,429 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசில்:  பாதிக்கப்பட்டோர் – 1,59,76,156,  உயிரிழப்பு – 4,46,527,  குணமடைந்தோர் –  1,44,22,209
பிரான்ஸ்:  பாதிக்கப்பட்டோர்-  55,81,351,  உயிரிழப்பு –  1,08,437, குணமடைந்தோர் –   51,86,704
துருக்கி:  பாதிக்கப்பட்டோர் –  51,69,951,  உயிரிழப்பு –    45,840, குணமடைந்தோர் –   49,98,639