ண்டன்

க்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்ப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இவற்றில் இங்கிலாந்த் ஆக்ஸ்ஃபோர்ட் பலகலை மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியும் ஒன்றாகும்.  இது இந்தியாவில் புனேவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் கோவிஷீல்ட் என்னும் பெயரில் தயாரிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியைச் செலுத்துக் கொண்டோரிடம் இங்கிலாந்து நாட்டு ஆய்வு நிறுவனம், ஒன்று நடத்திய ஆய்வின் முடிவுகள் லான்செட் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.   இந்த ஆய்வு ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேர் மற்றும் பிரேசிலில் 4.20 கோடி பேரிடம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனா தடுப்பூசி 2 ஆம் டோஸ் செலுத்திக் கொண்ட போதும் 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து பாதுகாப்பு மங்க தொடங்கி விடுவதாகத் தெரிய வந்துள்ளது.  குறிப்பாக ஸ்காட்லாந்தில் இந்த தடுப்பூசி 2 ஆம் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் வாரத்தை விட 5 ஆம் மாதத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு 5 மடங்கு அதிகம் பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.