தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பைசர் மற்றும் மாடர்னா ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கு கொரோனா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது 3-வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போடவும் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதால் வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.