சிகாகோ

மெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.67 கோடியைத் தாண்டி உள்ளது.  இதில் 53.88 லட்சம், பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24.82 கோடி பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்  தற்போது 2.30 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்  இதில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 5.22 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  இதில் 8.30 லட்சம் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 4.0.8 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1.06 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.  நேற்று ஒரே நாளில் இங்கு 1.81 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் முக்கிய நகரான சிகாகோ நகரில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கந்துக் கொள்ளத் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  மக்கள் உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்களில் கூடும் போதும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என சிகாகோ நகர மேயர் அறிவித்துள்ளார்.   இங்கு ஒமிக்ரான் அதிக அளவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.