தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டில் கண்டறிப்பட்டுள்ள பிறழ்வு வைரசான ஒமிக்ரான், அதிவேகமாக பரவி வருகிறது. உலகின் 50க்கும் மேற்பட்ட நாடு களில் பரவி உள்ள நிலையில், தமிழகம்உள்பட இந்தியாவிலும் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே  ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், மேலும் 43 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. சார்ஜாவில் இருந்து  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடிடககு கடந்த 19ம் தேதி திரும்பியவருக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது ரத்தம் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அதில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்,   தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான உறுதி செய்யப்பட்டு உள்ளதால், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோல ஆந்திராவிலும் தொற்று பாதிப்பு 2 ஆக அதிகரித்து உள்ளது.  கென்யாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, ஆந்திர மாநிலத்துக்கு காரில் சென்ற 39வயது பெண்ணுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில்  ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்து உள்ளது.