டில்லி

மேலியா மைய ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.   இந்த பரவல் தற்போது சுமார் 90க்கும் அதிகமான நாடுகளில் காணப்படுகிறது.   இந்த ஒமிக்ரான் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன/

இவ்வாறு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மருந்துகளில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருந்தும் ஒன்றாகும்.,   இந்த மருந்து குறித்து கமேலியா மத்திய ஆய்வகம் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.   இந்த ஆய்வு ஸ்புட்னிக் வி தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஒமிக்ரானுக்கு எதிரான செயல்திறன் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  அதைப் போல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 6 மாதங்கள் கழித்தும் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஸ்புட்னிக் வி தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு மிகவும் குறைவாக ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.   ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 80% வரை செயல்பட்டு வருவதாக ஆய்வறிக்கை தெரிய வந்துள்ளது.  இந்த எதிர்ப்புத் திறன் சுமார் 6 மாதங்கள் வரை குறையாமல் உள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.