சென்னை:
தமிழக காவல்துறையினரால் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை கொரோனா வைரஸ் நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அத்தியாவசியத்தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் ஏராளமா னோர் அரசின் உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களை மடக்கி எச்சரிக்கும் காவல்துறையினர், பலரிடம் அபராதமும் வசூலித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 31ந்தேதி கணக்கெடுப்பின்படி, ஊரடங்கை மீறியதாக 1லட்சத்து 25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 38,387 பேர் மேலும், 34,178 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, 14 லட்சத்து 47,944 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் தேசிய பொதுச்செயலாளர் வாழப்பாடி இராம சுகந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கிய வகையில், வாகன ஓட்டிகளிடம் காவல்துறை வசூலித்துள்ள மற்றும் வசூலித்து வரும் அபராதத் தொகையினை, கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்துள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்! வாழப்பாடி இராம சுகந்தன்