சென்னை:

மிழகத்தில் கொரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து 3571 பேர் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.

சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்க, தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு அமைச்சர் மாற்றப்பட்டு உள்ளாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏராளமானோர், விடுகளிலேயே  தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியானர்வர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் வீடுகளில் தனிமைப்படுத்தப் படுததில் இருந்து வந்தவர்களில்  3571 பேர் நோய் தொற்று பரவலுக்குரிய காலமான 28 நாட்களை  நிறைவு செய்துள்ளனர்.

மேலும், 23,308 பேர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.

அமைச்சர் வேலுமணியின் அறிவிப்பு தமிழக ஊடகத்துறையினர் மட்டுமின்றி அதிமுக, திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களிலும், அரசியல் நோக்கர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறைக்கு என்று தனியாக அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்து வரும் நிலையில், அவர் துறையினருக்கான தகவலை அமைச்சர் வேலுமணி கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா தொற்று விவகாரத்தில் திறமையாகவும், சுறுசுறுப்பாகவும் பணியாற்றி வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அவரை கடந்த சில நாட்களாக வெளியே தலைக்காட்ட அனுமதி மறுத்து அதிமுக தலைமை  ஓரங்கட்டி வருகிறது.

இந்த நிலையில்தான், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று சுகாதாரத்துறை அமைச்சக தகவலை தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டு விட்டாரா அல்லது அவருக்கும் கொரோனா பாதிப்பா?  என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது…

தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?