வாஷிங்டன்

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,102 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.46 லட்சத்தைத் தாண்டியது.

உலக அளவில் நேற்று 73102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,46,003 ஆகி உள்ளது.   நேற்று 5227 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 74,654 ஆகி உள்ளது.  நேற்று வரை 2,78,445 பேர் குணமாகி உள்ளனர்.  47,513 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

நேற்றும் அமெரிக்காவில் புதிதாக மற்றும் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நேற்று மரணம் அடைந்தோர் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்தது.

அமெரிக்காவில் நேற்று 30,331 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,004 ஆனது.  நேற்று 1255 பேர் மரணம் அடைந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 10,871 ஆகியது.19,671 பேர் குணம் அடைந்துள்ளனர். 8879 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று 5029 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,675 ஆனது.  நேற்று 700 பேர் மரணம் அடைந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 13,341 ஆகியது.40,437 பேர் குணம் அடைந்துள்ளனர். 6931 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று 3599 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,32,547 ஆனது.  நேற்று 636 பேர் மரணம் அடைந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 16,623 ஆகியது.22,837 பேர் குணம் அடைந்துள்ளனர். 3898 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் நேற்று 489 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,778 ஆனது.  நேற்று 18 பேர் மரணம் அடைந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 136 ஆகியது. 375 பேர் குணம் அடைந்துள்ளனர்.