டெல்லி: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை நிச்சயம்; இது ஆபத்தானது, அலட்சியம் வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், மாநில அரசுகள் தளர்வுகளை வாரி வழங்கியுள்ளது. இதனால், திருவிழாக்கள், கோவில் விழாக்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் ஆபத்தானது என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்க தலைவர்  டாக்டர் ஜே.ஏ.ஜெயலா, இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. இது ஆபத்தானதும் கூட. மக்கள் அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.

எந்தவொரு தொற்றுக்கும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருந்திருப்பதை முந்தைய பரவல்களில் அறிய முடிகிறது. மூன்றாவது அலையை சமாளிக்க எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டியுள்ள இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதும், மக்கள் கூட்டமாக நடமாடுவதும் வேதனையாக உள்ளது.

சுற்றுலா, புனித யாத்திரை போன்றவை தேவைதான் எனினும் சில மாதங்கள் காத்திருக்கலாம். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறினார்.