சென்னை

ன்று சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.   தற்போது சிறிது சிறிதாக அது குறைந்து வருகிறது.  விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன,   மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்துகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறது.  இதனால் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது பணிகள் நிறுத்தப்பட்டு தடுப்பூசி முகாம்கள் மூடப்படுகின்றன.  இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் நகரில் இன்று தடுப்பூசி முகாம்கள் இயங்கும் எனவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.