சென்னை:

மிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில், ராயபுரத்தில் 164 பேருக்கும், திருவிக நகரில் 128 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோா் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.  இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  673 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கொரோனா தொற்று பணியில்  ஈபட்டுவந்த 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தினசரி  2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனையை  அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் மக்கள்தொகை அதிகம். இதுவரை 22,000 – பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கபட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களைதான் தற்போது பரிசோதனை செய்துள்ளோம்.

இந்தியாவிலேயே சென்னையில் இறப்பு வகிதம் 1.8% ஆக உளது. இது ஒப்பீட்டளவில்குறைவுதான்.  இனிவரும் நாட்களில் தனி நபர் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை சென்னையில் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.