சென்னை: 
வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருவோருக்கு ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பரிசோதனை கட்டாயம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும்,  14 நாட்களுக்கு  தனிமையில் கண்காணித்தல் உள்ளிட்ட மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.