மும்பை

மும்பை நகரில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 1.03 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து அதில் 5817 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 73.5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23.7 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மும்பை நகரில் பாதிப்பு குறைந்து வருவதாக  மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திள்ளார்.  கடந்த ஒரு வாரமாக 6000 முதல் 7000 பரிசோதனைகள் நடப்பதாகவும் இதில் தினசரி சுமார் 1500க்கும் குறைவானோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரியாகப் பின்பற்றுவது எனக் கூறப்படுகிறது.

கொரோனா பரவுதல் அதிகரித்தது முதலே மும்பை மாநகராட்சி பரவுதல் அதிகமாக உள்ள குடிசைப்பகுதிகளை கவனிக்க தொடங்கியது.   அங்குள்ள அறிகுறி உள்ளோர் உடனடியாக தனிமைப்படுத்தபப்ட்டுள்ளன்ர்.  குடிசை பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தது,  ஜுர மருத்துவமனைகள் அமைத்தது, உள்ளூர் மருத்துவர் மூலம் நேரத்தில் சிகிச்சை அளித்தது, கிருமி நாசினி தெளித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன்.

மும்பை மாநகராட்சி ஆணையர் சுரேஷ் ககானி, ”இனி மாநகராட்சி அனைத்து நகரவாசிகளும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி, இல்லங்களில் சுகாதாரம். உள்ளிட்டவற்றை கவனிக்க உள்ளோம்.  முகக் கவசம் அணியாத வெளியாட்களை குடியிருப்புக்குள் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்த உள்ளோம்.  ஒவ்வொரு குடியிருப்பிலும் உடல் வெப்ப சோதனை மற்றும் கை துடைப்பான் ஆகியவற்றை நுழைவாயிலில் வைக்க அறிவுறுத்த உள்ளோம்.

அடுத்த சிலநாட்களில் விநாயக சதுர்த்தி வருவதால் ஆகஸ்ட் 22 முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள விநாயக சதுர்த்தியை மிகவும் எளிமையாகக் கூட்டமின்றி கொண்டாடக் கேட்டுக் கொண்டுள்ளோம்.  அத்துடன் ஒரு வட்டத்துக்கு ஒரு கணபதி என்னும் அடிப்படையில் சிலைகள் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம். ” எனத் தெரிவித்துள்ளார்.