சென்னை:
மிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதுஎன்று தமிழகஅரசு  ஒப்புக்கொண்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3144 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மரணம் அதிகமாக இருப்பதாகவும், ஆனால், தமிழகஅரசு மறைத்து வருகிறது என்று திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அறப்போர் இயக்கமும் இதுகுறித்து சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கொரோனா மரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழகஅரசு தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர்,  மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என்று தெரிவித்து உள்ளார்.
மருத்துவர் வடிவேலன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் வேறு காரணங்களால் உயிரிழந்த தாகக் கருதப்பட்ட 444 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளதாகக தெரிவித்தார்.
இன்றைய கொரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.