சென்னை
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு, பொதுமக்களியே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகிறது. குறிப்பாக சென்னை யில் தொற்று பரவல் மக்களின் அரசின் உத்தரவை மதிக்காத தன்மையால் அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று (22ந்தேதி) ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்னைக 42,752 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 18,372 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,23,756 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 633 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் உயிரிழப்பு 651 ஆக அதிகரித்துஉள்ளது.
இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 5 பேர் பலி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 18 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.