சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் ஏராளமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

திருவள்ளூரில் இன்று 100 பேர் பாதிப்பு

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில்,  நேற்றைய (22ந்தேதி)  நிலவரப்படி 2,645 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களில், 1,427 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அங்கு இதுவரை உயிர்பலி ஏதும் இல்லை.

இந்த நிலையில், இன்று  காலை நிலவரப்படி புதிதாக மேலும், 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு   2,745 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 55 பேர்  பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 55 பேர்  பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.  நேற்றைய நிலவரப்படி (22ந்தேதி)  காஞ்சிபுரத்தில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,215 ஆக இருந்தது. இதுவரை தொற்றில் இருந்து  600 பேர் குணமாகி உள்ளனர்.  603 பேர் நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 658 ஆக அதகரித்துள்ளது. மேலும், இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இன்று 114 பேர் பாதிப்பு

திருவண்ணாமலையில் இன்று மேலும் 114 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  நேற்று (22ந்தேதி) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி,  1,199 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை,  465 பேர் குணமடைந்த நிலையில்,  727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,313 ஆக அதிகரித்து உள்ளது.

தேனியில் இன்று 60 பேர் பாதிப்பு

தேனியில் இன்று  மேலும் புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இவர்களில் 30 பேர் சென்னையில் இருந்து தேனிக்கு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மொத்த பாதிப்பு   296 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, தேனியில் 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி மாவட்டத்தில் 2 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.