திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டுமே இதுவரை 12,762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் புதியதாக 7 குழந்தைகள், 29 பெண்கள் உள்பட 48 பேருக்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 304 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிகை தொற்று 352 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 92 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் பலியாகி உள்ளனர்.