சென்னை:
வடசென்னை அனல் மின் நிலையத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்க வாய்ப்பு என மின்சார அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தளர்வால், தற்போது மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளின் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 3,000 மெகாவாட் மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டுக்குள் மின் தேவையை அதிகரிக்கும் பொருட்டு, 6000 மெகாவாட் மின்சாரம், அனல் மற்றும் நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. tரும் டிசம்பரில் அது 2021 ஜனவரியில் மின் உற்பத்தி திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.
கொல்லிமலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நீர் மின் நிலையங்கள் அமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
2023-2024-இல் இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 11 ஆயிரம் மெகாவாட்டை மட்டுமே தேவைக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி இருப்பதால், 3000 மெகாவாட் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் 3000 மெகாவாட் மின்சாரம் இருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.