சென்னை: மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சேலம், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை (மே 20) ஆய்வுமேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்ககம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மொத்த பாதிப்பு 16,31,291-ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இருந்தாலும் மக்கள் ஒத்துழைக்க மறுப்பதால், தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்  அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நாளை (மே 20) சேலம், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை, ஆக்சிஜன் பயன்பாடு, படுக்கை வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3 மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.