மதுரை : உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த அளவிலான பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பானது.
வரலாற்று புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு, கோவிலுக்கு உள்ளேயே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதுபோல, இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு இந்து அறநிலையத்துறை தடை விதித்தது.
இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பட்டாபிஷேகமும் திக்கு விஜயமும் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரின் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி யில்லை என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் திருமண வைப விழா குறைந்த அளவிலான பக்தர்களுடன் பெண்கள் தாம்பூலங்கள் எடுத்துசெல்ல மீனாட்சி சுந்தரேசுவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தாபர். பின்னர், மீனாட்சி சுந்தரேஸ்வரம் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, திருக்கல்யாணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்யஅனுமதிக்கப்பட்டுள்ளது.