ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கல்

Must read

ஈரோடு:
கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

மேலும், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கு நன்றி தெரித்ததோடு முதல்வராகப் பதவியேற்று முதல்முறையாக பெரியார் மண்ணுக்கு வருகை தந்ததற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து முதல்வர், பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வரிடம் மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும், தாலுகா நிருபர்களுக்கும் 5 ஆயிரம் ஊக்க தொகை வழங்க வேண்டும்,

பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீத கட்டண சலுகை ஆந்திர அரசு வழங்குவதை போல் தமிழக அரசும் வழங்க வேண்டும்,

கொரோனாவால் மறைந்த கோபிசெட்டிபாளையம் தனியார் டிவி செய்தியாளர் சந்திரசேகர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வழங்கப்பட்டது.

More articles

Latest article