சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனுவில், ரேஷன் அட்டை மற்றும் நலவாரிய அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்,கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று தலைமைநீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது ஆஜரான தமிழகஅரசின் வழக்கறிஞர்,  நல வாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும்,   குடும்ப அட்டை இல்லாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என கூறினார்.

இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிக்ள், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது எனக்கூறிய தலைமை நீதிபதி “உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும்” என  மனுதாரர் கிரேஸ் பானுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]